ஆரோக்கியம்

நெஞ்சில் சளி அடர்த்தியா இருக்கா? இதனை கரைக்க தொடர்ந்து 21 நாட்கள் இந்த சூப்பரான பானத்தை குடிங்க!

பொதுவாக சாதாரண சளி ஏற்பட்டால் அதுவாகவே சரியாகிவிடும். சளியில் ஏற்படும் அடுத்தகட்ட பிரச்சனையான நெஞ்சு சளி உள்ளது. இருப்பினும் இதன் அறிகுறிகள் உடனே தென்படாது.

மூச்சுக்குழாய் அலர்ஜி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்திற்கு பின்னர் நெஞ்சு சளி தெரியவரும். நெஞ்சு சளி ஏற்படும் பட்சத்தில் இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு போன்றவை வந்துவிடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்து விடுவது நல்லது. அந்தவகையில் தற்போது நெஞ்சு சளியை விரட்ட கூடிய ஒரு அற்புத பானம் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • பூண்டு பல் – 5 அல்லது 7
  • பசும்பால் – 200 மில்லி
  • தண்ணீர்- அரை டம்ளர்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூனில் பாதி அளவு
  • மிளகுத்தூள் – கால் டீஸ்பூனில் பாதி அளவு
  • பனங்கற்கண்டு – இனிப்புக்கேற்ப

தயாரிக்கும் முறை

பசும்பாலில் தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றவும். அதில் பூண்டு பல்லை தோலுரித்து சேர்த்து வேகவிடவும். பூண்டு பற்கள் சில நிமிடங்களில் வெந்துவிடும்.

பிறகு அதை இறக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து இனிப்பு தேவையான அளவு பனங்கற்கண்டு கலக்கவும். பிறகு அதை நன்றாக கரண்டியால் மசித்து இளஞ்சூட்டில் குடிக்கவும்.

இந்த பூண்டு பாலை தினமும் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். உணவுக்கும் பால் குடிப்பதற்கும் இடையே ஒரு மணி நேர இடைவெளி இருக்கட்டும். அதே போன்று பூண்டு பால் குடித்த பிறகு எதையும் சாப்பிட கூடாது.

தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை குடிக்க வேண்டும். இதுவே நெஞ்சு சளியை அகற்றி சளியை முழுவதுமாக வெளியேற்றும். சளி மலம் வழியாக கரைந்து வெளியேறக்கூடும்.

குறிப்பு

பூண்டு பால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அப்படி கொடுக்கும் போது பூண்டின் அளவை குறைத்து கொடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்க கூடாது. பூண்டு தொடர்ந்து எடுக்கும் போது குழந்தைகளுக்கு ஒவ்வாமை பிரச்சனை உண்டாகலாம்.

யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது?

கல்லீரல் கோளாறுகள், குடல் பிரச்சனை,இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், ஒற்றைத்தலைவலி பிரச்சனை க்ண்டிருப்பவர்கள், உடல் உஷ்ணம் அதிகமாக கொண்டிருப்பவர்கள், நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், வாய் துர்நாற்றம் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் அதிகமாக பூண்டை எடுத்துகொள்வதன் மூலம் பிரச்சனை தீவிரமாகலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  பல் வியாதிகள் நீங்க சில வழிமுறைகள்!!
Back to top button
error: