தமிழ்நாடு

மழை காலத்தில் செய்ய வேண்டியது & செய்யக் கூடாதது – அமைச்சர் விளக்கம்..

தமிழகத்தில் மழைக்காலத்தில் மக்கள் எது போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் எது போன்றவற்றை செய்யக் கூடாது என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான கனமழை:

தமிழகத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அரசு, பாதிப்புகளை சரி செய்யும் விதத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதே போல் மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

images 13 1

இப்படி இருக்க தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்கள் இந்த மழைக்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எது போன்ற நடவடிக்கைகளை செய்யக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து விதமான பாதிப்புகளை சரி செய்யவும் அரசு தயாராக உள்ளது. தொடர்ந்து பாதிப்புகளை சரி செய்ய நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது”

அமைச்சர் அறிவுறுத்தல்:

“36 வருவாய் மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலகட்டத்திற்கு தகுந்தாற் போல் அனைத்து வித பணிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் சில நேரங்களில் கவனமுடன் இருப்பது நலம். இந்த பொது முடக்க காலத்தில் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் தற்போது மழை பெய்ந்து ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் நீர் நிறைந்துள்ளது”

fer

“அதனால் பிள்ளைகளை கவனமுடன் பார்த்து கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும். இடி, மின்னல் போன்ற சமயங்களில் முடிந்த அளவு வீட்டிற்கு வெளியே வராமல் இருப்பது நலம். செம்பரம்பாக்கம் ஏரியில் நிறையும் நீரினை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அவசர காலகட்டத்தில் தங்கிக்கொள்ள வசதியாக தற்போது 4,713 தங்கும் விடுதிகள் தயார் நிலையில் உள்ளன” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!