ஆரோக்கியம்

அரிசி உணவால் உடல் பருமன் குறையுமா?

அரிசி உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றும் சர்க்கரை வியாதி வரும் என்றும் பலர் கூறுவதுண்டு. பொதுவாக அரிசியானது தவிடு, சத்து நிறைந்த நுண்ணுயிர் ஆகியவை கொண்டுள்ளது. அரிசியில் உள்ள தவிட்டில் அதிக நார்சத்து உள்ளது. மேலும், வைட்டமின் பி-யும் உள்ளது. சிவப்பு அரிசியில் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சிவப்பு அரிசியை பாலிஷ் செய்யும்போது அரிசியிலுள்ள ஜெர்ம் மற்றும் தவிடு முழுமையாக நீக்கப்படுவதால் அதில் வெறும் மாவுச் சத்து மட்டுமே இருக்கிறது. இவையே உடல் பருமனுக்கு காரணாகிறது.

சிவப்பு அரிசி

இந்நிலையில், அதிக உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு தொடர்ந்து சிவப்பு அரிசி உணவு வழங்கப்பட்டு சோதனை செய்து பார்த்தபோது அவர்களின் உடல் எடை கணிசமாக குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, வெள்ளை அரிசியை தவிர்த்து சிவப்பு அரிசியை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். அனைத்து நோய்களும் விலகும். மேலும், மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் இருப்பதால், குண்டாக இருப்பவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். அதனால் நரம்புகள் வலிமையாவதுடன், உடல் எடையும் கணிசமாக குறையும். மூங்கில் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதையடுத்து தொடர்ந்து சாப்பிட்டால், எலும்புகள் வலிமை பெறுவதுடன், சர்க்கரையின் அளவு குறையும்.

இதையும் படிங்க:  உடலுக்கு மருந்தாகும் வாழைப்பூ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: