ஆரோக்கியம்

தினமும் காபி குடிப்பதால் உடலின் இந்த முக்கிய உறுப்பில் மாற்றம் ஏற்படுமா?

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 1/4 கிலோ எடை கொண்டது.

இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். நாம் உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை உற்பத்தி செய்வது கலலீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் அங்கங்கே படிந்து இரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும்.

இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காபி குடிப்பது நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஆய்வுகள் நடந்துள்ளது. அதில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

அதேவேளையில் டீ, பழ சாறு போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

காபி குடிப்பதால் நிறைய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த புதிய ஆய்வுகள் காபி குடிப்பது கல்லீரல் புற்றுநோய் வராமல் காக்கும் என தெரிவிக்கின்றன. மேலும் காபின் அல்லாத காபி பருகுவதால் குறைந்த அளவு நன்மைகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:  கருப்பு ஏலக்காயில் ஒளிந்துள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: