ஆரோக்கியம்

தேங்காய் எண்ணெய் சருமத்தை அழகாக்குமா?

தேங்காய் எண்ணெய் என்பது சமையலுக்கு மட்டுமல்லாது அழகை பராமரிக்கவும் பயன்படுத்தலாம்.

அது எப்படி?

தேங்காய் எண்ணெய்யை முகத்தில் லேசாகத் தேய்த்து வந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.

தோல் சுருக்கத்திற்கு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தேய்த்து வந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.

கை, கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொள்வதால், சூரிய வெளிச்சம் நேரடியாக படாது. அதேசமயம் ஈரப்பதத்தையும் அளிக்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய்யை முகம், கை கால்களில் தடவிக் கொள்வதால் சருமம் வெடிக்காது.

கண்களுக்குக் கீழ் கருமை, வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு துளி தேங்காய் எண்ணெய்யை கண்களுக்குக் கீழ் தேய்த்து தடவி விட்டால் கண்கள் பொலிவு பெறும்.

முக்கிய குறிப்பு

தேங்காய் எண்ணெய்யில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் அல்லது பேக்கிங் சோடா ஏதேனும் ஒன்றை கலந்து நன்குக் கலக்கி முகத்தில் தேய்த்து 7 – 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும்.

இதையும் படிங்க:  ஆரோக்கியமான பற்களுக்கு ஏழு ஆலோசனைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: