இந்தியா

கொரோனா பரவல் வரும் 15ம் தேதி முதல் உச்சத்தை எட்டும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக தீவிரம் அடைந்து வரும் நிலையில், வரும் 15ம் தேதி முதல் அதன் பரவல் உச்சத்தை எட்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ​மிகவும் அதிகமாக இருந்தது. தினமும் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை 70 ஆயிரத்தைத் தொட்டது. அதன் பின் படிப்படியாக குறைந்த தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

corona covid19 1068x561 1

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் வரும் 15ம் தேதி கொரோனா பரவல் உச்சத்தைத் தொடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

airport corona covid19

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்‍ கொள்வதில், பொதுமக்‍கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: