உலகம்

தொண்டையில் சிக்கிய 7 அங்குல மீன்.. அதிர்ந்து போன மருத்துவர்கள்..

கொலம்பியாவில் வினோதமான சிகிச்சை ஒன்று நடைப்பெற்றுள்ளது. ஒருவரின் தொண்டையில் இருந்து 7 அங்குல மீனை அகற்றியுள்ளார்கள். தற்போது அவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

24 வயதான நபர் ஒருவர், சென்ற மாதம் ஜனவரி 23 ஆம் தேதி கொலம்பியாவின் பிவிஜய் நகராட்சியில் உள்ள ஒரு ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மீனை பிடித்து தனது கையில் வைத்திருக்க, தூண்டிலில் இரண்டாவது மீன் சிக்கியது. அதைப் பற்ற முயற்சித்த போது கையில் மீன் கடித்து நழுவத் தொடங்கி தப்ப முயன்றது. அதனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன் கையில் ஏற்கெனவே பிடித்து வைத்திருந்த மீனை தன் வாயில் வைத்தார். எதிர்பாராவிதமாக வாயில் வைக்கப்பட்ட மீன் தொண்டைக்குழியில் இறங்கியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் மருத்துவமனைக்கு தானே நடந்து சென்றார்.ஆனால் அவர் சரியாக பேச முடியாததால் தனது பிரச்சினையை விளக்க முடியவில்லை. டாக்டர்கள் விரைவாக ஸ்கேன் செய்து மீன்களை அகற்றும் பணியைத் தொடங்கினர்.

தற்போது சிகிச்சை மூலம் மீன் அகற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. 7 அங்குல மீன் முழுமையாக அகற்றப்பட்ட பின் மருத்துவமனையில் இரண்டு நாள் ஓய்வில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளைஞர்.

Back to top button
error: Content is protected !!