ஆரோக்கியம்இந்தியா

குப்புறப்படுத்தால் ஆக்சிஜன் அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறும் ஆலோசனை..!

நாடெங்கும் அதிகரித்திருக்கும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, ஹரியானா, மும்பை என பல்வேறு மாநில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் விநியோகம் முழுவதுமாகத் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளார்கள்.

இந்தப் பற்றாக்குறை சூழலில் ஆக்சிஜனை கடைசி துளிவரை வீணடிக்காமல் சேமிப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் பலர் ஆலோசனை கூறி வருகிறார்கள்.

டெல்லியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அரவிந்த் சோனி ஆக்சிஜன் சேமிப்புக்காகச் சில முக்கியப் பாயிண்ட்களை முன்வைத்துள்ளார்.

அவை பின்வருமாறு,

1. குப்புறப்படுத்து தலைதூக்கிய நிலையில் இருக்கும் (Awake Proning) முறை,உங்கள் மருத்துவரிடம் இதன் செய்முறை விளக்கம் குறித்துக் கேட்கவும்.

2. ஆக்சிஜன் செறிவூட்டல் (Saturation) அளவை 90-92 சதவிகிதத்திலேயே பராமரித்தல்.

3. நேரடி ஆக்சிஜன் ட்யூபுக்கு பதிலாக மூக்கு வழியாகச் செலுத்துதல்.

4. ஆக்சிஜன் குழாய் கசிவுகளின் வழியாகதான் 25 சதவிகிதம் வரை வீணாவதால் குழாய்களைப் பழுதுபார்த்தல்.

5. மருத்துவப் பணியாளர்களுக்கு ஆக்சிஜன் சேமிப்பு தொடர்பான பயிற்சியை வழங்குதல், என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:  கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: