ஆரோக்கியம்

படுத்த உடன் தூக்கம் வரணுமா? அப்போ இதை பண்ணுங்க!!

நாட்டில் பல பேருக்கு உள்ள பெரிய பிரச்சனையே துக்கம் வராதது தான். இதற்காக சில மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். இது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று. படுத்தவுடன் தூங்குவதற்கு சில டிப்ஸ் இதோ.

தூக்கம்:

உலகில் யார் படுத்தவுடன் தூங்குகிறார்களோ அவர்களே பணக்காரர்கள் என கூறுவதுண்டு. ஏனெனில் தற்போதைய தலைமுறையில் வேலை பளு, மனஅழுத்தம் என பல பேர் தங்கள் தூக்கத்தை கெடுத்து கொள்கின்றனர் . மேலும் தூக்கம் வராததிற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம் மற்றும் அதிக நேரம் டிவி, மொபைல்கள் பார்ப்பது தான்.

நாம் உறங்க செல்லும் அரைமணி நேரத்திற்கு முன் டிவி, மொபைல் போன்றவற்றை பார்க்க கூடாது. நம் உடலுக்கு சரியான உழைப்பு இல்லாவிட்டாலும் கண்டிப்பாக தூக்கம் வராது. மேலும் நாம் இரவு நேரங்களில் எளிதான உணவுகளையே உன்ன வேண்டும். அதிகப்படியான உணவுகளை உண்ணும்போது அது நம் தூக்கத்தை கெடுகிறது. அதாவது இட்லி, இடியப்பம் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மேலும் இரவில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு தூங்கும் முன் பால் குடித்தால் நன்கு உறக்கம் வரும். பாலில் மஞ்சள்தூள் அல்லது பூண்டு அல்லது கசகசா சேர்த்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். இரவு நேரத்தில் மொட்டை மாடி அல்லது வெளியே 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் தூக்கம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: