இந்தியா

மோடிக்கு ரூ.100 அனுப்பிய டீ கடைக்காரர்! எதற்காக தெரியுமா?

பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் அனுப்பியுள்ளார் டீ கடை காரர் ஒருவர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த டீ கடைக் காரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாய் பணத்தை மணியார்டரில் அனுப்பியுள்ளார்.

அதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கையில், பிரதமர் மோடி தனது தாடியை நன்கு வளர்த்துக்கொண்டுள்ளார்.

அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் அந்த அது இந்த நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும்.

மேலும் தற்போது நாட்டின் மருத்துவ வசதிகளையும் அதிகரிக்க அவர் முயற்சி செய்ய வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடுபட அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: