ஆன்மீகம்

உலகின் முதல் இரட்டையர்கள் யார் என்று தெரியுமா?

ஒருமுறை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரும் வியாழ பகவானைக் கவனிக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு “பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள் ” என சபித்தார்.

தாங்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்தருளுமாறு குருபகவானை இருவரும் வேண்டினார்கள். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, “தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பொழிவார்.. அப்போது உங்கள் சாபம் நீங்கும்” என்றார்.

தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள ஆருத்ரா கபாலீஸ்வரரையும், வருணாம்பிகையையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை (தற்போதைய ஈரோடு) நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து ரம்பை, ஊர்வசியின் பாவம் போக்கினார். இந்த ரம்பை, ஊர்வசி தான் உலகின் முதல் இரட்டை குழந்தைகளாக பிறப்பெடுத்தவர்கள் என்பது புராண ரீதியான கூற்று.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: