இந்தியாதமிழ்நாடு

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்? இது உங்களுக்கு தெரியுமா?

யாரெல்லாம் வருமான வரி செலுத்தணும்? வருமான வரி கட்டுவது நமது பொறுப்பா? வருமான வரியின் நிர்வாக அமைப்பு என்ன? நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

வருமான வரி என்றால் என்ன?

ஒவ்வொரு நபரின் வருமானத்தின் மீதும் இந்திய அரசு விதிக்கும் வரியே வருமான வரி. வருமான வரியை கையாளுவது தொடர்பான விதிமுறைகள் வருமான வரிச் சட்டம் 1961இல் இருக்கின்றன.

வருமான வரியின் நிர்வாக அமைப்பு என்ன?

இந்திய அரசின் வருவாய் விவகாரங்களை நிதியமைச்சகம் கையாளுகிறது. வருமான வரி, செல்வ வரி ஆகிய நேரடி வரி விவகாரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் கவனிக்கிறது. நிதியமைச்சகத்தின் ஒரு அங்கமான வருவாய் துறை கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் செயல்படுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி தொடர்பான விவகாரங்களை வருமான வரித் துறையை வைத்து கவனித்து வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கண்காணிப்பில் வருமான வரித் துறையால் வருமான வரிச் சட்டம் நிர்வகிக்கப்படுகிறது.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்?

தனிநபர்கள் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், தனிநபர் சங்கங்கள், நிறுவனங்கள், LLP உள்ளிட்டோர் வருமான வரி செலுத்த வேண்டும்.
வருமான வரி எப்படி வசூலிக்கப்படும்?
மூன்று வழிகளில் அரசு வருமான வரியை வசூலிக்கிறது. ஒன்று, குறிப்பிட்ட வங்கிகளில் வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி செலுத்தலாம். இரண்டு, Taxes deducted at source [TDS] மூலமாக வரி வசூலிக்கப்படும். மூன்று, Taxes collected at source [TCS] மூலமாக வசூலிக்கப்படும்.

வரி செலுத்துவது மக்களின் பொறுப்பா?

ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தை கணக்கிட்டு வருமான வரியை சரியாக செலுத்த வேண்டியது அரசியல் அமைப்பு கடமை.

Back to top button
error: Content is protected !!