ஜோதிடத்தில் உள்ள 12 ராசிக்காரர்களில் நீர் ராசிகள் என்பது கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகள் நீரை குறிப்பன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் ராசிகள் கங்கா மாதாவின் வாகனமான முதலையை சின்னமாக கொண்டுள்ளது. முதலை நீரில் இருக்கும் போது அதிக பலம் வாய்ந்தவையாக இருக்கும். நீரில் முதலையிடம் யானையும் அடங்கி போகும்.
முதலையின் சக்திக்கு சில எடுத்துக் காட்டுகள்:
பனி காலத்தில் முதலையின் தோலை கிராமத்தின் நான்கு மூலைகளிலும் கட்டிவிட்டால் அந்த கிராமத்தில் பனி கொட்டாது.
கிராமங்களில் முந்தைய காலத்தில் மழை காலம் வரும் பொழுது ஆறு, குளம், குட்டைகளில் தவளைகளின் சத்தம் அதிகமாக காணப்படும். இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். எனவே கிராம மக்கள் என்ன செய்வார்கள் என்றால் முதலையின் கொழுப்பால் உருவான நெய்யை கொண்டு தீபம் ஏற்றி தவளைகள் இருக்கும் இடங்களில் வைப்பார்கள். அந்த தீபம் எரிந்து முடியும் வரை தவளைகள் அமைதியாக இருக்கும்.
இரவில் தெரு தெருவாய் குறி சொல்லும் குடுகுடுப்பு காரர்கள் (கோடாங்கிகள்) முதலை பல்லையும் அரிதாரதையும் ஒன்று பட அரைத்து நாய்வாய் கட்டு மந்திரம் உருவேற்றி துணியில் முடிந்து கொள்வார்கள். இவர்களிடம் இந்த மந்திர கட்டு கலவை இருப்பதால் தெருநாய் இவர்களை பார்த்து ஒன்றும் செய்யாது.
வீட்டில் வளர்க்கும் கிடா ஆடு பெண் ஆட்டிடம் எப்போதும் குறும்பு செய்யும் அதற்க்கு முதலையின் கொழுப்பை கிடா ஆட்டின் நெற்றி பொட்டில் தேய்த்து விட அடங்கி அமைதியாகிவிடும்.அதில் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது பலரும் அறியாத ரகசியமாகும்.
இவ்வாறு இருக்க நீர் ராசியான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் நீரில் வாழும் முதலையின் தெய்வீக சக்தி பொருந்திய பல்லை டாலராகவோ அல்லது மோதிரமாகவோ செய்து அணிந்து கொண்டால் அவர்களுக்கு வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அரணாக நின்று அந்த பல் பாதுகாக்கும். எந்த விதமான துஷ்ட சக்திகளும் அவர்களை அணுகாது. கண்திருஷ்டி பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள், வசியம் செய்யும் மந்திரங்கள், மைகள் என்று எதுவும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
அதிக சக்தி வாய்ந்த இந்த முதலை பல்லை அனைவரும் அணிந்து கொள்வது கூடாது. கடகம், விருச்சிகம், மீனம் இந்த மூன்று ராசிக்காரர்கள் புதியதாக தொழில் தொடங்க இருக்கும் பொழுது இந்த முதலை பல்லை வைத்து ஆரம்பித்தால் தொழில் பிரகாசமாக இருக்கும்.
எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் தீர்ந்து விடும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களது வாகனத்தில் இதனை தொங்க விட்டால் விபத்து ஏற்படுவதை தடுக்கும். உங்கள் உயிரை பாதுகாக்கும் சக்தியாக இருக்கும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh