தமிழ்நாடு

சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. தற்போது எந்த இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மாதந்தோறும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவார்கள். இதனால் அந்த பணிகள் நடைபெறும் நேரத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மின்விநியோகத்தை தடை செய்வர். மேலும் அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து விடுவார்கள். தற்போது இதேபோல் நாளை சென்னை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது அது எந்த பகுதிகள் என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அடையாறு பகுதிக்கு உட்பட்ட சிலப்பகுதிகளில் இந்த நேரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். அதாவது அடையாறு பகுதியான பரணி ஹோட்டல், ஏ.பி.எஸ், ஜெய் டிம்பர், எல்.பி.ரோடு ஒரு பகுதி, இம்காப்ஸ் மற்றும் ஆனந்த் பிளட்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!