உலகம்
கொரோனாவை சிறப்பாக கையாண்டு முதல் இடம் பிடித்த நாடு எதுன்னு தெரியுமா?..
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூசிலாந்து முதல் இடம் பிடித்துள்ளது.
லோவி நிறுவனம் ஆய்வு
சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் 98 நாடுகளில் ஆய்வு நடத்தியது. நோய் கட்டுப்பாடு, அரசின் செயல்பாடு, பொருளாதார நிலை, பராமரிப்பு ஆகிய அம்சங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா பரவலை தடுக்கும் பணியில் நியூசிலாந்து முதல் இடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த இடங்களை வியட்நாம், தைவான், தாய்லாந்து நாடுகளும் பிடித்துள்ளன. 98 நாடுகளில் இந்தியாவுக்கு 86-வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா 94-வது இடத்தில் உள்ளது.