இந்தியா

மதுபானங்களை இலவசமாக வழங்க திட்டம்? எங்கு தெரியுமா?

இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத புதுவித இலவச அறிவிப்பை தெலுங்கானா மாநிலம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் பல நாட்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒரு சிலர் தங்களுடைய குடி பழக்கங்களில் இருந்து விடுபட்டனர். அதேசமயம் ஒரு சிலர் டாஸ்மாக் எப்போது திறக்கும் என காத்திருந்தனர்.

இந்த சூழலில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெலுங்கானா அரசு வித்தியாசமான முயற்சியாக மதுபானங்களை இலவசமாக கொடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கொரோனா காலத்தில் மதுபான விற்பனை குறைந்த நிலையில், அதனை மீண்டும் அதிகரித்து மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த இலவச மதுபானம், உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒருநாள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் எனவும் டோக்கன் வினியோகிக்கப்பட்டு அதன் பின்னர் குறிப்பிட்ட அளவுக்கு மது வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும். ஆனால், இந்த இலவச அறிவிப்பு மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: