ஆரோக்கியம்தமிழ்நாடு

மலம் கழிப்பதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

நமது உடல் ஆரோக்கியத்தை மலம் கழிக்கும் நேரத்தை வைத்தே கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

காலை கடன் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். யார் ஒருவர் தினமும் காலையில் தவிர்க்காமல் காலை கடனை முடித்து வருகிறார்களோ அவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

நாம் தினமும் காலையில் சீரான முறையில், மலம் கழிக்காமல் இருப்பதற்கு இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம் மற்றும் நமது உணவில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைகளே முக்கிய காரணமாக உள்ளது.

எனவே நாம் தினமும் மலம் கழிக்கும் போது, ஏற்படும் பிரச்சனைகள் நமது உடலின் ஆரோக்கியத்தை குறைக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

மலம் கழிப்பதற்கு சிறந்த நேரம் எது?

நமது உடம்பில் உள்ள சிறுகுடலானது, முதல் நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவை செரிமானம் அடையச் செய்து, மறுநாள் காலையில், தான் அந்தக் கழுவுகளை வெளியேற்றுகிறது. எனவே நாம் காலையில், கண் விழித்த முதல் 30 நிமிடங்களில் மலம் கழிப்பது சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

காலையில் எழுந்ததும் நம்முடைய முதல் வேளையே மலம் கழிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் மலம் கழிப்பதில் சிரமமாக இருப்பதை உணர்ந்தால், ஒரு கப் காபி, சுடுதண்ணீர், அல்லது சுடுதண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது இது போன்ற முயற்சிகள் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒருசிலருக்கு காலை உணவை முடித்த பிறகு அல்லது அலுவலகம் சென்ற பிறகு இது போன்ற நேரங்களில் தினமும் சீராக ஒரே நேரத்தில் வந்தாலும் கூட நமது குடல் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

நாம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் வரை மலம் கழிப்பது இயல்பானது. ஆனால் இரண்டு நாளுக்கு ஒருமுறை அல்லது ஒரே நாளில் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிப்பது இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், நமது குடல் இயக்கம் மற்றும் செரிமானம் சீராக இல்லை என்று அர்த்தமாகும்.

Back to top button
error: Content is protected !!