ஆரோக்கியம்

வைட்டமின் சி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?

வைட்டமின் சி நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.

இந்த வைட்டமின் நீரில் கரையக் கூடியது. மேலும் இவை ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது.

இவை கடைகளில் மாத்திரை வடிவில் கிடைக்கின்றது. இருப்பினும் சிலர் மருத்துவரின் பரிந்துரை இன்றி அடிக்கடி வாங்கி பயன்படுத்துவதுண்டு.

உண்மையில் இதனை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் ஒரு சிலபக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. இதில் பல நன்மையும் உண்டு, பக்கவிளைவுகளும் உண்டு. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மைகள் என்ன?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதில் இந்த வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தோலில் சிறு காயம் ஏற்பட்டாலும் அதை குணமாக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் வைட்டமின் சி மிகமிக அவசியம்.

வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றி. அதாவது, உண்ணும் உணவானது செரிக்கும்போது உடலில் சிகரெட் புகை, கதிர்வீச்சு அல்லது மாசுபடும்போதும் அதிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கில்களின் விளைவுகளை இது தடுக்க உதவும்.

எலும்புகள், தசை நார்கள், தசை நாண்களை வலுவாக வைத்திருக்கவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஒருநாளில் 200மி.கி வைட்டமின் சி அதிகமாக எடுத்துக்கொண்டால் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைத்து விரைவில் குணமடைய செய்யும்.

நிமோனியாவின் தீவிரத்தையும் குறைக்கும். மேலும் சுவாச நோய் தொற்றுகளின் தீவிரத்தைக் குறைக்கும்.
தினமும் வைட்டமின் சி எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஒரு நாளைக்கு 100 முதல் 200மி.கி வைட்டமின் சி உடலுக்கு தேவை. அதை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் கலந்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாமா?

நாள் ஒன்றுக்கு 500மி.கி -1000மி.கி கூடுதலாக எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் மேம்படும்.

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?

ஒரு நாளில் 1 கிராம் அளவுக்கு மேல் எடுத்துக்கொள்பர்களுக்கு சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

அது மட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிடிப்பு, தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

யாரெல்லாம் வைட்டமின் சி மருந்துவடிவில் எடுத்துக்கொள்ளக்கூடாது?

சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள்.

ஹீமோக்ரோமாடோசிஸ்(Hemochromatosis) என்று அழைக்கப்படும் இரும்புச்சத்து அதிகம் உள்ளவர்கள்.

தலாசீமியா(Thalessemia) எனப்படும் ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள்.

மருத்துவரின் பரிந்துரை இன்றி வைட்டமின் சி எடுத்துக்கொள்ளலாமா?

பெரும்பாலும் உடலில் எந்தவொரு வியாதியும் பிரச்சினைகளும் இல்லாதவர்கள் என்றால், படிப்படியாக உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றால் தினமும் 500மி.கி முதல் 1000 மி.கி வரை சுமார் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீரக நோய், கல்லீரல் நோய் மற்றும் பிற கடுமையான பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்வதே நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: