ஆரோக்கியம்தமிழ்நாடு

வாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.

எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் என்பதால் தான் இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் எடுத்து கொள்கின்றேன்.

பொதுவாக எல்லா வாழைப்பழங்களிலும் வைட்டமின் ஏ, பி, பி2, சி உயிர்சத்துக்களும், சுண்ணாம்பு சத்து, புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்துக்களும் நிரம்பியுள்ளன. இதில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள வாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

அந்தவகையில் தற்போது வாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும் என்பதை பார்ப்போம்.

 • வாழைப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பது உண்மை தான் ஆனால் அதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, எடை அதிகரிக்கச் செய்யும்.
 • ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்னும் சுரப்பி தான் காரணம் . இவை அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிட்டால் சுரக்கும்.
  ஹைப்பர்கலேமியா இது நம் ரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். படபடப்பு, பிரசர், வயிறு உப்புதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் மாரடைப்பு வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
 • வாழைப்பழத்தில் அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பதால் பற்சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உணவுப்பொருளை மெல்லும் போது ஸ்டார்ச்சுகள் பல் இடுக்குகள் போய் தங்கிவிடுகிறது. சரியாக சுத்தம் செய்யாத போது பல் இடுக்கில் இருக்கும் ஸ்டார்ச்சுகளிலிருந்து பாக்டீரியா பரவி பல் வலி, பற்சொத்தை போன்றவை ஏற்படும்.
 • வாழைப்பழத்தில் அதிகப்படியான ட்ரிப்டோபான் மற்றும் அமினோ ஆசிட் இருக்கிறது. இவை மூளையின் செயல்பாடுகளை மழுங்கச் செய்து தூக்கம் கொள்ள வைக்கும். அதனால் காலை நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 • வாழைப்பழத்தில் விட்டமின் பி6 அதிகப்படியாக இருக்கிறது மருத்துவர்களின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி விட்டமின் பி6 எடுத்துக்கொண்டால் அது நரம்புகளை பாதிக்கும்.
 • தொடர்ந்து வாழைப்பழம் எடுப்பவர்களுக்கு, லேட்டக்‌ஸ் அலர்ஜி ஏற்படும். இதனால் ஆஸ்துமா, கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படும்.
 • தொடர்ந்து அதிகப்படியான வாழைப்பழம் எடுப்பவர்களுக்கு வயிற்று வலி உண்டாகும். இதில் இருக்கும் ஸ்டார்ச்சுகள் ஜீரணமாக தாமதமாகும். மேலும் மேலும் தொடர்ந்து அதே உணவை எடுத்துக் கொள்வதாலும் மற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் ஜீரணப்பதில் சிக்கல் ஏற்ப்பட்ட வயிற்று வலி உண்டாகும்.
 • வாழைப்பழத்தில் இருக்கும் கரையும் தன்மையுள்ள ஃபைபர் மற்றும் ஃப்ரூக்டோஸ் என்னும் இரண்டு வேதிப்பொருளும் உடலில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தக்கூடியது.
 • வாழைப்பழம் மீடியம் லெவல் க்லைகமிக் உணவுகள் பட்டியலில் இருக்கிறது. இதனைச் சாப்பிட்டால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் டைப் 2 டயாப்பட்டீஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
 • சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றோலோ அல்லது சிறுநீரகத்தொற்று போன்ற பாதிப்புகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும்.
 • வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்.
 • வாழைப்பழத்தை வாங்கி வைத்து இரண்டு நாட்களில் சாப்பிட்டுவிட வேண்டும். வாழைப்பழைத்த தோலுரித்து அதிக நேரம் வைத்திருக்க கூடாது. இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும்.

Back to top button
error: Content is protected !!