ஆரோக்கியம்

சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத செயல்கள்! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?

உணவு சாப்பிட்டவுடன் இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைபிடிப்பது போன்ற விடயங்களை செய்யும் பழக்கம் பலருக்கும் உண்டு. உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

புகைபிடிப்பது

பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம். இயல்பாகவே புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு எனும் பட்சத்தில், சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்பிடிப்பது செரிமானத்தை விரைவில் நடத்தவிடாமல் தடுத்து அஜீரணத்தை உண்டாக்கும். எனவே, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற இரண்டு பழக்கங்களையும் சாப்பிட்டு முடித்தவுடன் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

திரவ உணவுகள்

திடமான உணவுகளை காலை அல்லது மதிய உணவாக உட்கொண்ட பின்னர், திரவ உணவுகளான பழச்சாறு போன்றவற்றை உடனடியாக அருந்தக் கூடாது. ஏனெனில், இது செரிமானச் சாறுகள் எனப்படும் Digestive juicesகளை உருவாகவிடாமல் தடுக்கும்.

தூக்கம்

சாப்பிட்டு முடித்தவுடன் உறங்குவது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்று. அஜீரணத்துக்கு முக்கியக் காரணியாக விளங்குவது, இதுதான். உணவு உட்கொண்டதும் தூங்குவதைவிட, சாப்பிட்ட உணவு செரிமானமாவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, செரிமானம் சீக்கிரம் நடைபெற நடப்பது, நேராக அமர்ந்து புத்தகம் படிப்பது என ஏதேனும் ஒன்றைப் பழக்கத்தில் கொண்டு வரலாம்.

குளிக்கும் பழக்கம்

முடிந்தவரை காலை எழுந்தவுடன் பல் துலக்கி, குளித்துவிடுவது சிறந்த பழக்கம். முடியாத பட்சத்தில் காலை உணவுக்கு முன்னதாகக் குளிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மாறாக எந்த நேரமாக இருந்தாலும், சாப்பிட்டு முடித்தவுடன் குளிப்பது தவறு. இதனால் கை மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் இயல்பைவிட வேகமாக இருக்கும். உடல், ஜீரணத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதைத் தொந்தரவு செய்யும் வகையில் எதையும் செய்யாமல் இருப்பதுதான் ஜீரணத்தை விரைவுபடுத்தும்.

உடற்பயிற்சி வேண்டாம்

உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம் மிகவும் அவசியமான ஒன்று. அதிகாலை அல்லது மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வது பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. சாப்பிட்டவுடன் செய்தால் வயிற்றுப் பிடிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. இதோ பலருக்கும் தெரியாத தகவல்!
Back to top button
error: