ஆரோக்கியம்

குளிக்காமல் 2 நாட்கள் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

பொதுவாகவே தினமும் குளிப்பது என்பது சுகாதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் குளிக்காமல் இருப்பதால், அனைவரது உடலிலும் ஒரே மாதிரியான தாக்கங்கள் ஏற்படுவது இல்லை.

2 நாட்களுக்கு குளிக்காமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? உடலில் 1000 வகையிலான பக்டீரியாக்களின் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும். இவை, சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. இதனால், சருமத் தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நமது உடலானது சுயமாகவே ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இவை தீய தாக்கத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

அன்றாடம் நம் உடலில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டுமானால், நாம் தினமும் குளிக்க வேண்டும்.

இதனால் நமது உடலை இயற்கையாக வலுப்படுத்த முடிகிறது. தேய்த்து குளிக்கும் போது, கண்கள், காதுகள், தொடை மற்றும் மூக்கு ஆகிய உறுப்புகளின் இடுக்குகளில் சரியாக தேய்த்து குளிக்க வேண்டும்.

ஏனெனில் அந்த பகுதிகளில் மட்டும் பக்டீரியாக்களின் தேக்கம் அதிகமாக இருக்கும். குளிர் காலங்களில் வியர்வை அதிகமாக இல்லை என்பதால், குளிப்பதை தவிர்ப்பது மிகவும் தவறான முறையாகும்.

உடல்நிலை குறைவாக இருந்தாலும், கூட இதமான நீரை கொண்டு அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் தண்ணீரைக் கொண்டு துடைத்து விட வேண்டும். இது பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும்.

இதையும் படிங்க:  இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்போ அவசியம் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாருங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: