ஆன்மீகம்தமிழ்நாடு

இந்த நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று சொல்லி வைத்ததற்கு அசர வைக்கும் உண்மை காரணம் என்ன தெரியுமா? மரம் வளர்ப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

மரம் வளர்ப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி சில மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம்? என்று பார்த்தால் அதிலும் மறைமுகமாக பல காரணங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை அறியாமல் பலரும் தவறான புரிதலுடன் அந்த மரங்களை முற்றிலுமாகவே தவிர்த்து விடுகின்றனர். மரம் வளர்ப்பது என்பது ஒரு ஊரையே ஆள்வதற்கு சமமாகும். அந்த வகையில் இந்த ஒரு நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

nelli maram1

பூக்கள் பூக்கும் அத்தனை தாவரங்களும் மகரந்த சேர்க்கை மூலம் தான் விருத்தி அடைகின்றன. பூக்களை நாடி வரும் பூச்சிகளும், வண்டுகளும் தாவர வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அவைகள் வந்து பூக்களின் மீது உட்காரும் பொழுது அதிலிருக்கும் மகரந்த தூள்கள் நேரடியாக சூழல்கள் மீது விழுந்து மகரந்த சேர்க்கை உண்டாகி இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இப்படி நடைபெறும் இனச்சேர்க்கை என்பது பெரிய நெல்லிக்காய் மரத்தில் எளிதாக நடப்பதில்லை.

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுபவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் எந்த ஒரு நோயும் அணுகாது. அந்த அளவிற்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பெரிய நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்வதற்கு பின்னணியில் அசர வைக்கும் உண்மையும் உள்ளது. பெரிய நெல்லி மரம் பூக்கள் பூக்க அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.

nellikai1

அதாவது நீங்கள் ஒரே ஒரு மரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டில் நட்டு வைத்தால் மரத்தில் காய்கள் காய்க்காது. கூடவே இன்னொரு மரமும் சேர்த்து நட்டு வைக்கும் பொழுது தான் அதில் காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு சில மரங்களில் எல்லாம் குறிப்பாக புளிப்பு தன்மை இருக்கும் மரங்களுக்கு அடியில் மற்ற செடிகள் முளைப்பதில்லை. அது போல் பெரிய நெல்லிக்காய் மரத்திற்கு பக்கத்தில் செடிகளும் முளைக்காது.

இது மாபெரும் இயற்கையின் ரகசியமாக இன்று வரை இருந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் மரத்தை வளர்க்க கூடாது என்று சொல்வதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மரத்தை முற்றிலுமாக வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லப்படவில்லை. உதாரணத்திற்கு முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்வார்கள்.

nelli maram

அதற்கு முக்கிய காரணம் முருங்கை மரத்தில் இருக்கும் கிளைகள் மிகவும் இளகிய கிளைகளாக இருப்பதால் எளிதில் முறிந்து விடும். அது யார் மீதாவது விழுந்து விடும் என்பதால் தான் அதனை வீட்டில் முன்னால் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். வீட்டிற்கு பின்னால் தாராளமாக வைத்து வளர்க்கலாம். எந்த இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்? எந்த இடத்தில் வைத்து வளர்க்க கூடாது என்கிற சூட்சமங்கள் மட்டுமே மரம் வளர்ப்பில் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

keezhanelli

புளியமரம், பெரிய நெல்லிக்காய் மரம் அமிலத்தன்மை கொண்டுள்ளதால் அதில் தேனீக்களும், வண்டுகளும் வந்து அமர்வதில்லை இதனால் எளிதாக மகரந்த சேர்க்கையும் நடைபெறுவதில்லை. எனவே பெரிய நெல்லிக்காய் மரத்தில் காய்க்காமல் போய் விடுகிறது. பெரிய நெல்லிக்காய் மரம் வீட்டில் வைத்து இருப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். நெல்லிக்காய் மரம் தோட்டத்தில் இருக்கும் பொழுது அதிக பூச்சிகள் வந்து மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற உதவுகிறது. அதனால் காய்களும் தோட்டத்தில் அதிகமாக காய்க்கிறது. வீட்டில் வைத்து வளர்த்தால் பிரயோஜனமில்லை என்றே அப்படி கூறி வைத்தார்கள்.

Back to top button
error: Content is protected !!