பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கை என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுவது கடுக்காயை தான். இது மாதவிடாயின் போது ஏற்படுத்தும் வலியை எளிதில் குறைக்கின்றது. அது எப்படி என்று தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை
- கடுக்காய்
- இலவங்கப்பட்டை
- தண்ணீர்
செய்முறை
முதலில் கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொள்ளவும்
அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
பின்சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.
ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh