ஆரோக்கியம்

எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும் தெரியுமா?

குளிப்பது என்பது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிலும், நீச்சலடித்து குளிக்கும் போதோ, அருவியில் நின்று குளிக்கும்போதோ ஒரு வகையான மகிழ்ச்சியை கொடுக்கும். அதையடுத்து ஒருவர் குளிக்கும்போது எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.

எவ்வளவு நேரம்

சாதாரணமாக வீட்டில் குளிக்கும் போது, 10 நிமிடங்கள் குளித்தால் போதும்.

அருவி போல் மேலிருந்து கீழ் நோக்கி விழும் நீரில் சுமார் அரை மணி நேரம் குளிக்கலாம்.

ஆறு போல் ஓடும் நீரிலும் அரை மணி நேரம் குளிக்கலாம்.

கிணறு மற்றும் நீர் தேக்கம் போன்ற இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் நீந்தி குளிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

குளிக்கும்போது ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீண்ட நேரம் குளிக்க கூடாது. ஏனென்றால், நீண்ட நேரம் குளிக்கும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையும்.

ஷாம்புவை தினமும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், முடியின் தன்மைக்கு பொருத்தமான ஷாம்புவை பயன்படுத்துவதே சரியானதாகும்

வெந்நீரில் குளித்தால் உடல் அலுப்பு நீங்கிவிடும் என்று அடிக்கடி வெந்நீரில் குளிப்பது, சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளுக்கு கேடு விளைவித்துவிடும்.

குளித்து முடித்தவுடன் தலையை, நன்றாக துவட்ட வேண்டும். அதுபோல் உடலில் படிந்திருக்கும் நீர்த்திவலைகளையும் நன்றாக துடைத்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அதுவும் சரும பாதிப்புக்கு காரணமாகிவிடும்.

வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது நல்லது.

குளிக்கும்போது ஷாம்புவை நேரடியாக தலையில் தேய்க்கக்கூடாது. அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தேய்த்து கழுவ வேண்டும்.

உணவு சாப்பிட்டதும் குளிப்பது உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இல்லாத போது, செரிமான கோளாறு ஏற்பட்டு மிகவும் சோர்வாக, மந்தமாக உணரச் செய்வதுடன், மலச்சிக்கல் மற்றும் குமட்டல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 மணிநேரத்திற்கு பிறகு குளிப்பது நல்லது.

உணவு சாப்பிட்ட பிறகு குளிப்பதற்கு பதிலாக, உணவு சாப்பிடுவதற்கு முன்பே குளிப்பது நல்லது. இது உடலின் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, செரிமானத்தை அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  உருளைக்கிழங்கு—பட்டாணி மஸாலா சுவையாக செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: