உலகம்

டிஜிட்டல் முறைக்கு மாறிய பிச்சைக்காரர்கள்.. எந்த நாட்டில் தெரியுமா?..

ஒருபுறம், சீனா (China) தனது நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதாகக் கூறிக் கொண்டிருக்கையில், மறுபுறம் இந்த நாட்டின் பிச்சைக்காரர்கள் நாளுக்கு நாள் நவீனமாகி வருகின்றனர்.

சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர். அந்த நாட்டில் பிச்சைக்காரர்கள் e-wallet பயன்படுத்தி, அதில் தொகையை செலுத்துமாறு கோருகின்றனர். இதனால், பணம் இல்லை என யாரும் சாக்கு சொல்ல முடியாது என்பதால் அவர்கள், இந்த டிஜிட்டல் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சீனாவில் பிச்சைக்காரர்கள் கியூஆர் குறியீடு (QR Code) கொண்ட ஒரு அட்டையை வைத்துக் கொண்டு நகரத்தின் சுற்றுலா தலங்கள் அல்லது வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் நிற்பதை காணலாம். இதுபோன்ற இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வருகிறார்கள். அவர்களிடன் பிச்சை எடுக்க அவர்கள் நவீன முறையை பின்பற்றி வருகிறார்கள்.

இதற்கு சீனாவின் மிகப்பெரிய இ-வாலெட் நிறுவனங்கள் இரண்டு, இந்த பிச்சைக்காரர்களுக்கு உதவுகின்றன. எலிப் மற்றும் வெச்சாட் வாலட் இந்த பிச்சைக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிச்சைக்காரர்கள் கியூஆர் குறியீடுகளின் உதவியுடன் பணத்தை பெற்றுக் கொண்ட உடன், பணம் கொடுத்தவர்களின் தரவு, நிறுவனங்களுக்கு செல்கிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்காகவும் இந்தத் தரவைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: