ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு, முளைகட்டிய பயறுகள், கொத்தமல்லி, சீரகம், வெண்டைக்காய் போன்றவற்றை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது வழக்கம்.

இந்நிலையில், வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து கொண்டால் பல நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஏனெனில் அவை உடலிற்கு பல்வேறு தீங்கை ஏற்படுத்தக் கூடியவையாகும். வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் குறித்து பார்க்கலாம்.

சோடா

சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது.

அவை வயிற்றில் உள்ள அமிலங்களுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் தான் முக்கிய காரணம்.

இந்த அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து வயிற்றில் கற்களை உருவாக்கி விடும்.

மாத்திரை

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.

ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

மது

ஆரோக்கியத்தை சீரழிப்பதில் முதன்மையானது மது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.

இது நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவு

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக் கூடாது.

வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

காபி

காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கி விடும்.

எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள்.

டீ

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள்.

டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.

எனவே, எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

இதையும் படிங்க:  கால்சியம் நிறைந்த எள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: