ஆரோக்கியம்தமிழ்நாடு

அடிக்கடி தக்காளி சாப்பிட்டால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுமா?

தக்காளி சாப்பிடுவது ஆபத்தானது கிடையாது, அதே சமயம் அதிகளவில் தக்காளி சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்

அதிகம் தக்காளி சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சினைகள்

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும்.

அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது சிறுநீரகத்தின்செயல்பாடுகளை குறைத்துவிடும்.

டயேரியா பாதிப்பு இருப்பவர்கள், உணவில் தக்காளியை சேர்க்க கூடாது. ஏனெனில் அது டயேரியாவை ஏற்படுத்தும் சால்மோனெல்லா பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும்.

தக்காளியில் அதிக அளவு லைகோபென் உள்ளது. எனவே அதிகமாக தக்களியை சேர்த்துக் கொண்டால், சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆசிட் நிறைந்த உணவு வகையில் ஒன்றான தக்காளியை அதிகம் சாப்பிட்டால், சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.

தக்காளியில் அல்கலாய்டு அதிகம் உள்ளது, எனவே உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டாகும்.

இதையும் படிங்க:  மிகவும் சுவையான "அன்னாசிப்பழ கேசரி" ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: