ஆரோக்கியம்தமிழ்நாடு

30 வயதை அடைந்த பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

முப்பது வயதை அடைந்த திருமணமான பெண்கள் குடும்பத்தின் அடுத்தக்கட்ட நிலை குறித்து அதிகம் யோசிப்பார்கள்.

30 வயது பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன?

கடன் தொல்லை இல்லாத வாழ்க்கையை கணவனிடம் எதிர்ப்பார்ப்பார்கள். ஏனெனில் முப்பது வயதுக்குள் கடன் தொல்லைகளை தீர்த்துவிட்டால், அது குழந்தைகளின் பள்ளி செலவுகளுக்கு எளிமையாகும்.

நடுத்தர வாழ்க்கை நடத்தும் அனைவருடைய கனவும் தனது சொந்த வீட்டில் குடியேறுவது என்பது தான். எனவே முப்பதை வயதை தாண்டுவதற்குள், எப்படியாவது ஓரு வீடு வாங்கிவிட வேண்டும் என்று மனைவியர் எதிர்பார்ப்பார்கள்.

குடும்பத்திற்குள் ஓர் நல்ல பெயர், நாம் சொல்வதை பிறர் கேட்கும் அளவிற்கு ஓர் நிலை. தனக்கு இல்லை எனிலும், தன் கணவனுக்காவது இந்த நிலை இருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.

பெண்களுக்கு தங்கத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருப்பது மிகவும் குறைவு தான். இருந்தாலும், சிலர் குறைந்தபட்சம் ஒருசில ஆபரணங்கள் தனக்கென்று இருக்க வேண்டும் என்று அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.

பெண்கள் தங்களின் முப்பது வயதுக்குள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது, அவர்களுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதுடன் உடல் ரீதியாகவும் கடினமாக இருக்கும். எனவே முப்பது வயதுக்குள் குழந்தை பாக்கியத்தை தன் கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

இதையும் படிங்க:  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: