ஆன்மீகம்

எதிர்மறை எண்ணங்கள் விலக இதை செய்யுங்கள்?

மனம் எதனோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ, அதிலிருந்து வரும் அனுபவங்களே எண்ணங்களாக எழுச்சி பெருகின்றன. மனதின் இத்தகைய செயலே எண்ணம் எனப்படுகிறது. ஒருவர் செய்யும் காரியங்களுக்கு அவரது மனமே காரணமாக இருக்கிறது. நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனதின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தம் கடமைகளைச் செய்கின்றன. மனம் தெளிவாக இருந்தால் தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றி வேரூன்ற வழி வகுக்கும். தம் சிந்தனையை பயன்படுத்தி அடுத்தவருக்கு தீமை தராமல் பிறருக்கு பயன்பட வாழ்வதே மனிதனின் கடமையாகும். அதையடுத்து, எண்ணங்கள் எத்தனை வகைப்படும்? எதிர்மறையால் என்ன விளைவுகள் ஏற்படும்? எப்படி நிவர்த்தி செய்வது? என்று பார்க்கலாம்.

எத்தனை வகைகள்

எண்ணங்கள் பொதுவாக நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் என இரண்டு வகைப்படும்.

நல்ல எண்ணங்களால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும், உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்.

தீய எண்ணங்களால் பிறருக்கு கெடுதல் செய்யும் மனப்பான்மையே வரும். இறுதியில், அது தன்னையும் அழித்து, தன்னை சார்ந்திருப்பவர்களுக்கும் துயரங்களை ஏற்படுத்தி விடும்.

என்ன விளைவுகள்

ஒரு நல்ல செய்தியை விட கெட்ட செய்திதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உளவியல் ரீதியாக உங்களின் முன்னேற்றப் பாதையை எதிர்மறை எண்ணங்கள் தடுக்கும்.

எதிர்மறை சிந்தனையாளர் எப்போதும் பிறரிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பர்.

எளிய தீர்வுகள்

எதிர்மறை மனநிலையிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கு, உங்கள் கவனத்தை வேறு செயலில் செலுத்துங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயலில் ஈடுபட முயற்சி செய்வது சிறந்தது.

உற்சாகமான இசையைக் கேட்பது, நடை பயணம் செல்வது அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பது ஆகியவை எதிர்மறையான எண்ணங்களிலிருந்து உங்கள் விடுவிக்கும்

தினமும் குளிப்பதன் மூலம் உடல் ரீதியான எரிச்சலைத் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் போன்றவை கூட தூய்மையாகின்றன.

நீங்கள் தண்ணீரில் மூழ்கி குளிப்பதன் மூலம் ​​உங்கள் உடல் மற்றும் பிறரிடமிருந்து உங்களுக்கு வந்த தீய எண்ணங்கள் சுத்திகரிக்கப்படும்.

ஏனென்றால் ஒருவரின் உடல் தூசு, தும்மல் போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படாமல் மற்றவர்களின் திருஷ்டி, உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் போன்ற பாதிப்புகளால் தாக்கமடைகிறது.

இந்த தாக்கம் அதிகரிக்கும் போது உடம்பு வலி, சோர்வு, மன அழுத்தம்,எரிச்சல், கோபம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகளை போக்குவதற்காக குளிக்கும்போது, உடம்பில் இருக்கும் அனைத்து நரம்புகளுக்கும் ஒரு புத்துணர்வு உண்டாகிறது.

இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் நாம் குளித்து முடித்தவுடன் உடம்பு மற்றும் மனதில் உற்சாகம் உண்டாகிறது.

இதனால் தான் பலரும் தன்னுள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலக இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்கின்றனர்.

சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான்.

அனைவரின் மனமும் துக்கத்தில் இருக்கும் போது அந்த இடத்தில் இருக்கும் கதிர் வீச்சுகளும் நல்லவிதமாக இருக்காது. ஆகவே வீட்டிற்கு வந்து குளிக்கும்போது இந்த எதிர்மறையான கதிர் வீச்சுகள் நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: