ஆரோக்கியம்

முகத்தில் எண்ணெய் வழிந்தால் இதைச் செய்யுங்கள்!

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது?

முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.

தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.

முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.

காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெறும்.

இதையும் படிங்க:  கபசுரக் குடிநீரின் நன்மைகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: