ஆரோக்கியம்

பருக்களால் வரும் தழும்பை போக்கனுமா? இரவு நேரத்தில் இதை செய்தாலே போதும்!

பொதுவாக முகத்தில் வரும் பருக்கள் தற்காலிகமானது என்றாலும் சரியான பராமரிப்பில்லாத காரணத்தால் அவை தழும்பாக மாறிவிடும்.

இந்த தழும்புகள் முகத்தின் நிறத்தை மாற்றி அழகை குலைக்க செய்யும். இது தான் கரும்புள்ளிகளாக மாறக்கூடும். சிலருக்கு தீவிரமாகும் போது பள்ளமாக மாறிவிடக்கூடும்.

எனவே பருக்கள் வந்த தழும்புகள் மறைவதற்கு இயற்கையான பொருள்களை கொண்டு பேக் போடலாம். அப்படியான சூப்பர் பேக் ஒன்றை செய்யும் முறை குறைத்து தான் இங்கு பார்க்கலாம்.

தேவையானவை

  • புதினா இலைச்சாறு – 3 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
  • பாசிப்பருப்பு மாவு – 4 டீஸ்பூன்

செய்முறை

பாசிப்பருப்பு மாவில் புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து விடவும். இதை முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

தினமும் இரவு நேரத்தில் இந்த பேக் போட வேண்டும். முகம் கழுவிய பிறகு இந்த பேக் போடலாம். தினசரி இந்த பேக் போட வேண்டும். எல்லா விதமான சருமத்துக்கும் இந்த பேக் போடலாம். இயற்கை பொருள்களை பயன்படுத்துவதால் இது சருமத்துக்கு எவ்விதமான பக்கவிளைவும் உண்டாக்காது.

இரவு நேர பேக் செய்து முடித்ததும் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். பன்னீர் கலந்த ஐஸ் க்யூப், புதினா சாறு கலந்த ஐஸ் க்யூப், ஆரஞ்சு சாறு ஐஸ் க்யூப் என ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி முகத்தை வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

இது சருமத்துளைகள் விரிவடைந்ததை இறுக்கி விடுகிறது. சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சருமம் சுத்தமாகும். சருமத்தின் மூன்று அடுக்கிலும் நுழைந்து சுத்தம் செய்கிறது.

இதனால் சருமம் பளிச்சிடுகிறது. இயற்கையாகவே சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்க இந்த பேக் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: