ஆரோக்கியம்

முகத்தில் வறட்சியா? கவலை வேண்டாம்!

சருமத்துக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காத போது இயல்பாகவே வறட்சியடையும். மேலும், வெயிலில் அலையும் போதும் சருமம் ஈரப்பதம் இழந்து விடும். பொதுவாக, முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு எப்போதுமே ஈரப்பதமான மென்மையான முகஅமைப்பு இருந்தாலே போதும். சருமம் வறட்சியடைந்து, சொரசொரப்பாக இருந்தால் பல பாதிப்புகள் உண்டாக தொடங்கும்.

ஒரு சிலருக்கு, குளிர் காலத்தில் பனியின் காரணமாகவும், முகம் வறண்டு விடும். அதையடுத்து, வறண்ட முகத்தை மாற்றி நன்கு பளிச்சென வைத்து கொள்வதற்கான ஐந்து பூசி (ஃபேஷியல்) முறைகள் குறித்தும், வேறு சில எளிய வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பாதாம் பூசி (ஃபேஷியல்)

பாதாம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

மஞ்சள் பூசி (ஃபேஷியல்)

மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றினால் உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

தேன் பூசி (ஃபேஷியல்)

1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும்.

ஓட்ஸ் பூசி (ஃபேஷியல்)

ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.

எலுமிச்சை பூசி (ஃபேஷியல்)

1/2 கப் பாதாம் எண்ணெய் இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த கலவையை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். அழகான தோற்றத்தைப் பெறுவீர்கள்.

எளிய வழிமுறைகள்

புதினா

சருமத்தை மிருதுவாக வைத்து கொள்வதற்கு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள புதினா சிறப்பான தேர்வாகும். முகத்தின் வறட்சியை குறைத்து மென்மையை கூட்டும். மேலும், குளிர்ச்சியான சருமத்தை பெற இது உதவும்.

பெருஞ்சீரகம்

பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை விரட்டி அடிக்கும் தன்மை இதற்கு உண்டு. சருமத்தில் இதை பயன்படுத்தினால் எப்போதுமே இளமையாக இருக்கலாம்.

அத்துடன் முக சுருக்கங்கள், கோடுகள், கரு வளையங்கள் போன்றவற்றையும் தடுக்கும் வல்லமை கொண்டது.

வேம்பு

சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் சிறப்பான தீர்வை கொடுக்க கூடியது.

பாக்டீரியாக்களினால் ஏற்பட்ட சரும பாதிப்பு, சொறிகள், அரிப்பு, எரிச்சல் முதலிய பாதிப்புகளுக்கு தீர்வை கொடுப்பதுடன் முகத்தை ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளும்.

கற்றாழை

கற்றாழையை வாரத்திற்கு 2 முறை தோலில் தடவி வந்தால் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து மிக மென்மையாக வைத்திருக்கும். மேலும், முகத்தில் வறட்சியை போக்கும் தன்மை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: