சினிமாபொழுதுபோக்கு

“இணையத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோரை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் திரைக்கு வரவிருந்த நிலையில் கரோனா காரணமாக வெளியிடப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி புரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஒரு மணி நேர காட்சிகள் (விஜய் அறிமுக காட்சி உள்ளிட்டவை) இணையத்தில் கசிந்துள்ளது.

https://i2.wp.com/etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10207056_l.JPG?w=708&ssl=1

அதன்காரணமாக படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் பக்கத்தில் இதுகுறித்து, ” மாஸ்டர் படம் ஒன்றரை ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வெளியாகவிருக்கிறது. மக்கள் அனைவரும் இப்படத்தை திரையரங்கில் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். யாரும் தற்போது லீக்கான காட்சிகளை பகிராதீர்கள். இன்னும் ஒருநாள்தான். பிறகு, மாஸ்டர் திரையில் பார்க்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காட்சிகளை லீக் செய்த ஐபி முகவரி அடையாளம் காணப்பட்டது என்றும், அதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!