ஆன்மீகம்

பெண்கள் அணியும் உடையில் தவறியும் இந்த 1 தவறை செய்து விடாதீர்கள்! வீட்டில் கடனும், பஞ்சமும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு!

ஒவ்வொரு வீட்டின் கண்களாக பெண்களை பாவிக்கின்றனர். குடும்பத்திற்கு ஆணிவேராக இருப்பது பெண்கள் தான். அந்தப் பெண்கள் சில விஷயங்களை செய்தால் அது அந்த வீட்டையும் சேர்த்து தான் பாதிக்கும். பெண்களுக்கு மட்டும் இவ்வளவு சாஸ்திரமா? என்ற ஆதங்கம் கொள்ள தேவை இல்லை. எந்த ஒரு வீட்டிலும் பெண்கள் சரியாக இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இதற்கு உதாரணமாக நிறைய பெண்களை நீங்களே பார்த்து இருக்கலாம்.

women 1

அப்படி இருக்கும் பொழுது எந்த வகையிலும் பெண்ணாக இருப்பவள் உயர்ந்தே இருக்கின்றாள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அத்தகைய பெண்கள் இந்த தவறை செய்வதால் வீட்டில் கடனும், பஞ்சமும் ஏற்பட நிச்சயம் வாய்ப்புகள் உண்டு என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த தவறு தான் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பெண்களின் உடைகள் எப்பொழுதும் நேர்த்தியாக இருக்க வேண்டும். நேர்த்தியாக உடை அணியும் பெண்களுக்கு துன்பங்கள் என்பதே வருவதில்லையாம். ஆடை சுதந்திரம் பற்றி பேசும் பெண்கள் உலகினருக்கு நம் முன்னோர்கள் சொல்லி சென்றது என்னவோ நல்ல விஷயங்களை மட்டும் தான். அதனை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம்? என்பதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது. பெண்கள் அணியும் ஆடை, கணுக்கால் தெரியும் படியாக இருந்தால், அந்த வீட்டில் கடன் தொல்லைகள் நிச்சயம் இருக்கும் என்கிறது சாஸ்திரம்.

pain1

இதனால் தான் என்னவோ வழிவழியாக பெண்கள் அணியும் ஆடையைப் பற்றி நிறைய சாஸ்திரங்கள் கூறப்பட்டு வருகிறது. பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அது அவர்களுடைய வசதிக்கு ஏற்ப தனிப்பட்ட உரிமைகள் தான். அதை ஒன்றும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் ஒரு பெண் இப்படி ஆடை அணிந்தால் வீட்டில் இதெல்லாம் நடக்கும் என்று சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. பெண்கள் கணுக்கால் தெரியும்படி உடை அணிந்தால் அடுத்த அடுத்த புதிய முயற்சிகள் தடைகளை சந்திக்கும். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் இடையூறுகளை சந்திக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

women1

அது போல் பெண்கள் உடை அணியும் பொழுது சுத்தமான உடை அணிவது அந்த வீட்டிற்கு நன்மையாம். அழுக்கு உடைகளை அணிந்து கொண்டு வீட்டை வலம் வருவது தரித்திரத்தை ஏற்படுத்தும். பெண்கள் தினமும் நிச்சயமாக முடிந்த அளவு சீக்கிரமே குளித்து விட வேண்டும். குளித்து சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு சமையல் செய்வதும், பூஜைகள் செய்வதும் வீட்டின் சுபீட்சத்தை அதிகரிக்கும்.

poojai

அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு வேலைகள் செய்வது தரித்திரத்தை உண்டாக்கும். அதன் மூலம் நிறைய கடன்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே பெண்ணாக இருப்பவள், அதிலும் ஒரு வீட்டின் பொறுப்பை எடுத்து நடத்தும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்கள் சுத்தமான ஆடை உடுத்துவது, கணுக்கால் தெரியாதபடி உடையை அணிவது வீட்டிற்கு மகாலட்சுமி அம்சத்தை கொண்டு வரும். அந்த வீட்டில் கடன்களும், பஞ்சமும் இல்லாமல் சுபீட்சமாக எப்போதும் இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: