ஆரோக்கியம்தமிழ்நாடு

பேன் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கா?

ஒரு நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்குவதாலும் எளிதில் பரவக் கூடியது ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி தான் பேன்.

இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளிக்குச் செல்லும் இளம்பெண்களே.

இந்த பேன்கள் மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே முட்டையிடுகின்றன. இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன.

இது இரத்ததை உறிஞ்சுவது மட்டுமன்றி அரிப்பால் தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும். எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வது நல்லது.

அந்தவகையில் பேன் தொல்லையை எப்படி இயற்கை முறையில் போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆலிவ் ஆயிலை முடிகளில் படுமாறு தடவி, காற்றுபுகா வண்ணம் பாத் கேப் கொண்டு (bath cap) கவர் செய்தால், முடியை விடாமல் இறுகப் பற்றி, ஒட்டியிருக்கும் முட்டைகளின் பிடிமானத்தை ஆலிவ் ஆயில் தளர்த்தி வெளியே கொண்டு வரும்.

எலுமிச்சைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து, பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப்பில் கவர் செய்துவிட்டால், அதன் வாடை தாங்காமல், முடியினை அலசும்போது பேன்கள் தானாகவே வெளியேறும்.

துளசி இலைப் பொடி, மருதாணி பூவின் பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, வேப்பங் கொட்டைப் பொடி, சீத்தாபழக் கொட்டை பொடி இவற்றில் ஏதாவது ஒன்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடிகளில் தடவி வெளியேற்றலாம்.

வெள்ளை மிளகுடன் பால், காட்டு சீரகத்துடன் பால் இவற்றில் எளிதாய் கிடைக்கும் ஒன்றைத் தலையில் தடவி பாத் கேப் பயன்படுத்தி கவர் செய்து, ஒரு மணி நேரத்தில் அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

லிஸ்டரின் மவுத் வாஷ் கொஞ்சமாக எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரத்தில், ஆப்பிள் சிடர் வினிகரை போட்டு முடியினை அலசினாலும் பேன் தொல்லை குறையும். ஹேர் டிரையரின் வெப்பத்திலும் பேன்கள் குறைய வாய்ப்பு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: