ஆரோக்கியம்

காலையில் வெறும் வயிற்றில் இதை மறந்து கூட சாப்பிட்டு விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் ஒரு சில உணவுகளை சாப்பிடவே கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஒரு மனிதனுக்கு காலை வேலை உணவு என்பது மிகவும் முக்கியம்.

அதனால் தான் காலையில் ராஜாவை போல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு சிலர் வேலை காரணமாக காலை உணவை தவிர்ப்பது உண்டு. இதனால் உடலில் பல வித நோய்கள் தாக்க நேரிடும்.

ஆனால் காலையில் ஒரு சில உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கவே கூடாது. மீறி எடுத்துக்கொண்டால் என்னவாகும் என்பதை பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:-

தக்காளி சாப்பிடுவதால் உடல் மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. ஏனென்றால் இதில் அமிலத்தன்மை உள்ளதால் வயிற்றில் புண்களை உண்டாக்கும் மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும்.

தயிர் அல்லது புளித்த பாலை காலையில் உட்கொள்வதால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் என்ற அமிலம் உருவாகிறது. இதனால் வாய்வுத்தொல்லை, செரிமான பிரச்னை, மலசிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

காய்கறி மற்றும் பழங்களின் சாலட் சாப்பிடுவது நல்லது தான். வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கி வயிற்று வலியை தூண்டும்.

காபி குடித்தால் நாள் நன்றாக இருக்கும் என்பது சிலரது கருத்து. ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிப்பதால் நெஞ்செரிச்சல், இரப்பை அழற்சி போன்றவை உண்டாக்கும்.

வெறும் வயிற்றில் சர்க்கரை பொருட்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உடலுக்குள் இன்சுலின் உற்பத்தியை நிச்சயமாக பாதிக்கும் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: