ஆரோக்கியம்தமிழ்நாடு

தப்பி தவறி கூட இரவு நேரங்களில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! மீறினால் இந்த ஆபத்துக்களை சந்திக்ககூடுமாம்!

இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக்கேட்டிருப்போம். காரணம் கேட்காமல் அதைப் பின்பற்றிக் கொண்டிருப்போம்.

இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம்.

ஆனால் ஒரு சில உணவுகளை இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடும் போது அவை உடலுக்கு சில தீங்கை ஏற்படுத்தும்.

அந்தவகையில் தற்போது இரவு நேரங்களில் என்ன மாதிரியான உணவை எடுத்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.

நீங்கள் மது அருந்திவிட்டு அப்படியே தூங்கும் போது, வயிற்றில் மிகுதியான அமிலத்தன்மை உள்ள மது தங்குவதால் பல உடலநல கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இரவு நேர உணவுகளுடன் சோடாவை சேர்ப்பது தவறானது. இது குடல் வால்வுகளை பாதித்து விடும். இயற்கையிலேயே சோடாவில் அதிகப்படியான அமிலச்சத்து இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

இரவு வேளைகளில் சாக்லேட் சாப்பிடுவது உங்களது உடல் பருமனை அதிகரித்துவிடும். ஏனெனில் சாக்லேட்டில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது.

சீஸில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இரவு நேரத்தில் சீஸை சாப்பிடுவதும் உடல் எடையை கூட்டிக்கொள்வதும் ஒன்றுதான்.

இரவு நேரங்களில் சிட்ரஸ் உணவுகளையோ அல்லது ஜூஸ் வகைகளையோ பருகுவது நல்லது அல்ல.

Back to top button
error: Content is protected !!