ஆரோக்கியம்தமிழ்நாடு

கோடை காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே கூடாதாம்! இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்..!

கோடை காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானது ஆகும்.

எனவே நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும் சமயத்தில் நாம் சில வகை உணவுகளை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பதும் அவசியம் ஆகிறது.

அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

கோடை காலத்தில் ஒரு கிளாஸ் ஐஸ்கட்டி போட்டு ஆல்கஹால் குடிப்பது உங்க உடல் வெப்பநிலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆல்கஹால் கோடை காலத்தில் நீரிழப்பை மேலும் மோசமாக்கும். உங்க நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து இது பல நோய்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

நம்மில் பெரும்பாலனோர் அந்த நாளை தொடங்க ஒரு கப் காபி அல்லது தேநீருடன் தொடங்குகின்றன. ஆனால் தேநீர் காபி போன்றவை குடிப்பது உடல் வெப்பநிலையையும், நீரிழப்பையும் அதிகரிக்கும். எனவே கோடை காலத்தில் காபி, தேநீருக்கு பதிலாக க்ரீன் டீ அல்லது ஐஸ் கட்டிகள் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆழமாக வறுத்த எண்ணெய் உணவுகளை கோடை காலத்தில் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த எண்ணெய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல கடுமையான நோய்களை சந்திக்க நேரிடும். இது உடல் வெப்பநிலையை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

கோடை காலத்தில் அனைவரும் மில்க் ஷேக்குகள் போன்ற பால் ட்ரிங்க்ஸ்களை விரும்புவார்கள். ஆனால் அவை உங்க உடல் வெப்பநிலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெண்ணெய், சீஸ், தயிர் போன்ற பால் பொருட்கள் உடல் வெப்பத்தால் வயிற்றில் அசாதாரண நொதித்தலுக்கு ஆளாகி அஜீரணத்தை ஏற்படுத்தும்.

பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை பழங்கள், ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்களை நீங்கள் கோடை காலத்தில் எடுத்துக் கொண்டால் உடல் வெப்பநிலை அதிகமாகி எரிச்சல் மற்றும் சோர்வைக் கூட ஏற்படுத்த வழி வகுக்கும்.

ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் கோடையில் உங்க உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் நீரிழப்பு மற்றும் நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக நீங்கள் மசாலாப் பொருள்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டியதில்லை. சீரகம், ஆர்கானிக் புதினா போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதன் மூலம் பலன் அடையலாம்.

மாம்பழம் கோடை கால சீசன்களில் அதிகமாக எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலைவலி போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் இதை அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.

பார்மிகியூ சிக்கன் போன்ற வறுக்க்கப்பட்ட இறைச்சி என்பது அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது. இந்த இறைச்சி வகைகள் உங்க உடல் வெப்பநிலையை அதிகரித்து புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதையும் படிங்க:  சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

கோடை காலத்தில் அதிகளவு ஐஸ் க்ரீம் சாப்பிடுவது அதிலுள்ள அதிகளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கிறது. ஐஸ் க்ரீம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. எனவே கோடை காலத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது சளித்தொல்லைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

சாஸ்களில் அதிக அளவு உப்பு, மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற செயற்கை சுவைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த சாஸ்களை தினமும் உட்கொள்ளும் போது உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இதனால் சோர்வு, வீக்கம் மற்றும் மந்தமான உணர்வுகளை பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: