ஆரோக்கியம்தமிழ்நாடு

மலச்சிக்கலை ஏற்படுத்தும் மோசமான உணவுகள்! சாப்பிடவே சாப்பிடாதீங்க..!

பொதுவாக நம்முடைய உடலில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவது மலச்சிக்கல் தான். அதற்கு மிக முக்கியக் காரணமே அஜீரணக் கோளாறும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் தான்.

அதிலும் மன அழுத்தம், போதுமான நீர் அருந்தாது, அதிகமான பால் பொருட்கள் உண்ணுதல் போன்ற பல காரணங்கள் மலச்சிக்கலுக்கு காரணமாக சொல்லப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக சில மோசமான உணவுகள் பெரிதும் காரணமாக இருக்கின்றது.

எனவே மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்துவது முக்கியமாகும்.

அந்தவகையில் மலச்சிக்கலை ஏற்படுத்து மோசமான உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் பட்சத்தில் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய உணவுகளில் முதல் இடத்தில் இருப்பது சீஸ் மற்றும் பால். நீங்கள் அவற்றை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

பாஸ்ட் புட்டில் அவற்றில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. எனவே அதை மெதுவாக உண்பதன் மூலம் உங்கள் செரிமானத்தை விரிவுப்படுத்தலாம்.

வறுத்த கோழி உணவுகள் அனைத்தும் கொழுப்பு நிறைந்தவை மற்றும் அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். இது உங்கள் பெருங்குடல் வழியாக மெதுவாக நகரும்போது அதிலிருந்து அதிகமான தண்ணீரை எடுக்கிறது. இதனால் கடினமான அல்லது உலர்ந்த மலத்தை அது உருவாக்குகிறது.

முட்டையில் புரதம் அதிகமாக இருந்தாலும் நார்ச்சத்து மிக குறைவு. இவை கூட மலச்சிக்கலை ஏற்படுத்தும். வேகவைத்த இறைச்சியில் கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. ஆனால் நார்ச்சத்து குறைவாக உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை கொண்டு செய்யப்படும் பிஸ்கட்கள், கப் கேக்குகள் போன்றவை நார்ச்சத்து மற்றும் திரவங்கள் குறைவாகவும் கொழுப்பை அதிகமாகவும் கொண்டுள்ளன. அதனால் இவை செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.

அதிகமாக பிரட் உண்பது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இது வெள்ளை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் நார்ச்சத்து குறைவாக உள்ளது.

மதுப்பானங்கள் உடலில் தண்ணீர் அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும். நீங்கள் மீண்டும் நீரேற்றம் பெறும் வரை உங்களுக்கு இது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: