தமிழ்நாடுமாவட்டம்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது – தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் போக்கு:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சியினர் இறங்கி உள்ளனர். இந்த முறை ஆட்சியினை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதற்கு முதல் கட்டமாக “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்தில் இருந்து நேற்று முதல் பிரச்சாரத்தை துவங்க உதயநிதி திட்டமிட்டிருந்தார்.

Sooriyan

இந்த பிரச்சாரம் அடுத்த ஆண்டு மே மாதம் வரைக்கும் 100 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படியே நேற்று மாலை உதயநிதி கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். இவரது பிரச்சத்திற்காக தஞ்சை டி.ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி,க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் என, 500க்கும் அதிகமான போலீசார் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது திருக்கோவலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது உதயநிதி மேடையில் ஏறினார்.

உதயநிதி கைது:

ஆனால், போலீசார் அவரை ஏறவிடாமலும் பிரச்சாரம் நடத்த விடாமலும் தடுத்தனர். இதனால் போலீசார் மற்றும் கட்சி தொண்டர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிலைமையினை சரி செய்ய போலீசார் உதயநிதி மற்றும் அவரது தொண்டர்களை கைது செய்தனர். கொரோனா விதிகளை மீறியதாக கூறி அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினுடன் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!