தமிழ்நாடு

‘கொரோனாவை விரட்டுவது போல திமுகவை விரட்ட வேண்டும்’ – முதல்வர் பேட்டி!

இன்று அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக கட்சி மலர பாடுபடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

அதிமுக:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன. இன்று அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னிர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பழனிசாமி, கட்சியே என் குருதியாக ஓடிக்கொண்டுள்ளது. தேர்தல் தேதியின் அறிவிப்பிற்கு முன்பாக நாம் தேர்தல் வேலைகளை முடிக்கவேண்டும். மேலும் ஒவ்வொரு பூத்துக்கும் 5 குழுக்கள் அமைத்து செயல் படவேண்டும்.

முதல்வர் உரை:

இந்த தேர்தலில் நாம் திட்டம் போட்டு செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி நமதே. கவர்னரை சந்தித்து திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் கூறிய தகவல் அனைத்தும் பொய்யானதே. திமுக முன்னாள் அமைசர்கள் 13 பேர் மீது உள்ள ஊழல் வழக்கை திசை திருப்புவதற்காக அதிமுக அரசு மீது ஊழல் புகாரை கூறி வருகிறார் ஸ்டாலின். ஊழல் குறித்து ஒரே மேடையில் பேசுவதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறாதது மூலமாகவே தெரிகிறது அதிமுகவின் ஆட்சி தன்மை. மீண்டும் நாம் மலர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் வேட்ப்பாளராக என்னை அறிவித்த பன்னிர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா நினைவிடம் 30 நாட்களில் திறக்கப்படும் என்றும் அவரது போயஸ் இல்லம் விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்பின் இதுகுறித்து பேசிய பன்னிர்செல்வம் கொரோனாவை நம் விரட்டுவதுபோல் 2021 தேர்தலில் நாம் திமுகவை விரட்ட வேண்டும். தமிழகத்தில் அதிமுக கட்சி 30ஆண்டுகளாக ஆட்ச புரிந்து வருகிறது. அதிமுக கட்சியின் ஆட்சியே மிக சிறப்பாக உள்ளது என்று மக்கள் அனைவராலும் கூறப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுகவின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள் என்று உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். அதிமுகவில் தொண்டர்களே எஜமானிகள் என்று கூறியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!