தமிழ்நாடு

திமுக எம்.பி., கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

திமுக எம்.பியும், அக்கட்சி மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:  4 நாட்கள் முக கவசம் அணிந்தால் கொரோனா குறையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: