இரவில் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு மூடிவிட்டு, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு அதன் நீரையும் குடித்து வந்தால் மலசிக்கல், உடல் சூடு மற்றும் உடல் சூடால் ஏற்படும் நோய்கள் என பல நோய்களுக்கும் நிவாரணியாகும்.
விரைவில் விந்து வெளியேறும் பிரச்சினை இருக்கக்கூடிய ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரிப்பதால் பிரச்சினைகள் நீங்கும்.
அல்சர் போன்றவற்றிக்கு வெந்தயம் சிறந்த நிவாரணி. அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் அதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாலும் அதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதாலும் இதய நோய் அல்லது இதய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.
வாய் துர்நாற்றம், வயிற்றுப்புண் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வாருங்கள். கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓட வெந்தயம் உதவி செய்யும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh