ஆரோக்கியம்

வாழையிலைக் குளியல் பற்றி அறிந்ததுண்டா?

வாழையிலைக் குளியல் என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய குளியலாகும். வாழையிலைக் குளியலில் மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு செய்வது நல்லது. உடலின் மேல் வாழை இலைகளைப் போர்த்திக் கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிட வேண்டும். சுவாசிப்பதற்காக மூக்குப் பகுதியில் மட்டும் சிறிய துவாரம் ஏற்படுத்திக் கொள்ளலாம். காலை 7 முதல் 9 மணியளவில் வாழையிலைக் குளியல் எடுப்பது நல்லது. பெண்கள் 10 நிமிடங்களும் ஆண்கள் அரை மணி நேரமும் வாழையிலைக் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.

நன்மைகள்

வாழை இலைகளின் மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் கோளாறுகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பலவிதமான தோல் நோய்களான இரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் வரும் பாத எரிச்சல், தூக்கமின்மை, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றிற்கும் நல்ல தீர்வாக அமையும்.

மருத்துவரின் பரிந்துரைப்படி மாதம் ஒரு முறையோ, அடிக்கடியோ இதைச் செய்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். வாழையிலைக் குளியலின்போது அதிக அளவு வியர்வை வெளிவரும் என்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். அதனால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:  உடல் நலனுக்கு தேவையான இயற்கை உணவுகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: