சினிமாபொழுதுபோக்கு

பா.இரஞ்சித்துடன் இணையும் துருவ் விக்ரம்..

பா.இரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித், தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ என்ற படத்தில் அறிமுகமானார். அதேபோல் ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ்.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் விரைவில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!