இந்தியா

கும்ப மேளாவில் கொரோனா நெறிமுறைகளை பறக்கக்விட்ட பக்தர்கள்.. கொரோனா தொற்று பரவும் ஆபத்து..!

கும்ப மேளாவையொட்டி, ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். முகக்‍கவசமின்றி, சமூக இடைவெளியை பின்பற்றாததால், கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்ப மேளா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடக்கும் இந்த திருவிழாவில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சாமியார்களும், பக்தர்களும் வந்து கங்கையில் புனித நீராடுவது வழக்கம்.

அதன்படி நேற்று, மடாதிபதிகள் புனித நீராடுவதற்காக, ”ஹர் கி பைரி’ என்ற படித்துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. பல்லக்கில் எடுத்து வரப்பட்ட சாமி சிலைகளுடன் அவர்கள் புனித நீராடினர். சாதுக்கள் ஏராளமானோர் பெரும் ஊர்வலமாக வந்து புனித நீராடினர்.

லட்சக்கணக்கான சாதாரண பக்தர்கள், வேறு படித்துறைகளில் புனித நீராடினர். சுமார் 10 லட்சம் பக்தர்கள்வரை புனித நீராடியதாக கும்ப மேளா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புனித நீராட வந்த பக்தர்களுக்கு போலீசார் முக கவசங்களை வினியோகித்தனர். ஆனால், புனித நீராடும்போது பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கும்பலாக நடமாடினர்.

இதனால், கொரோனா பரவல் மேலும் அதிரிக்கும் ஆபத்து உருவாகி உள்ளது. ஏற்கனவே 2 முறை நீராடலில் சமூக இடைவெளி பின்பற்றாததால் ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: