தமிழ்நாடு

செப்.5 வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்செந்தூர் கோவிலும் ஒன்று. கொரோனா தொற்று எதிரொலி உலகம் முழுவதும் பாதித்து வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்கப்படுவதோடு, கொரோனா நெறிமுறைகள் பின்பற்றுமாறு பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் நோய் தொற்று பரவும் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவது முதலியன தடை செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் அதிக அளவில் கூடுவதால் நோய் தொற்று தீவிரமாக பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதற்கு நாளை முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தரிகளின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆவணித் திருவிழா நிகழ்வுகளை வீட்டிலிருந்தே யூடியூப் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுவதாகவும் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு ஆசிரியர்கள் & குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு – செப்.5 க்குள் தடுப்பூசி!!
Back to top button
error: