தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்பாடு – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கொரோனா காரணமாக அதிகரிக்கும் மாணவர் சேர்க்கையால் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பல மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் பலர் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். கடந்த வாரத்திற்கு முன்னதாக எடுத்த கணக்கெடுப்பின் படி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3.40 லட்சம் பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இதனால் அதிகமான மாணவர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் தக்க வைத்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டியுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது, கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்களை தக்கவைத்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 17 சதவீதமாக உள்ள பள்ளி இடைநிற்றலை 5 சதவீதமாக குறைப்பது தான் தமிழக அரசின் இலக்கு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: