தமிழ்நாடு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு – தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

இலங்கை யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்த முறையற்ற செயலை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவிடம்:

இலங்கை முள்ளிவாய்கால் பகுதியில் நடத்தப்பட்ட தமிழ் இனவாத படுகொலைகளுக்கு சாட்சியாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். இந்த நினைவிடத்தை இடிப்பதற்கு ராஜபக்க்ஷே சகோதரர்கள் உத்தரவிட்டிருந்தனர். கடந்த 2019ல் இது கட்டப்பட்ட நாள் முதலே இதற்கான முயற்சிகள் நடந்து வந்தன. இதை இடிப்பதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்கள் எழுந்தன. சில மாதங்கள் கழித்து நேற்று மீண்டும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து பல்கலைகழக மாணவர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய கட்சியை சேர்ந்தோர் என பலரும் அங்கு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும, ராணுவம், காவல் துறை, அதிரடிப்படையினர் ஆர்கியூயோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவில் இரவோடிரவாக தற்போது அந்த நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைக்கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” சிங்களர் ஆதிக்கத்தை தகர்ப்போம், தமிழர் அடையாளம் காப்போம்” என பதிவிட்டுளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து ” அன்று யாழ் பல்கலை கழகம் எரிக்கப்பட்டது, இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சிதைக்கப்பட்டுள்ளது. இது தமிழினவாத தாக்குதலின் தொடர்ச்சியே” என்று கூறியுள்ளார். இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இந்த செயலுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!