பொழுதுபோக்கு

சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு ரெசிபி!

மோர் குழம்பு என்றாலே சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும், இப்போது நாம் பூசணிக்காயில் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தயிர் – 1 கப்
பூசணிக்காய்- கால் கிலோ
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
உளுந்து – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கடுகு – ½ ஸ்பூன்
தேங்காய் – 5 துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

பூசணிக்காயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் உளுந்து, சீரகம், கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, பூசணிக்காயைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

அடுத்து அரைத்த கலவை, உப்பு, மஞ்சள் தூள், தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் பூசணிக்காய் மோர் குழம்பு ரெடி…!!

இதையும் படிங்க:  இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் வறுவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: